எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா: சசிகலாவை ஆதரிப்போம்

நெல்லை: எந்தக் காரணம் கொண் டும் அதிமுக உடைவதோ, கட்சிக் கொடியும் சின்னமும் முடக்கப்படுவ தோ நடக்கக் கூடாது என முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாகி யுள்ள சசிகலாவை தாம் ஆதரிப்ப தாகத் தெரிவித்தார். "எம்ஜிஆரால் துவக்கப்பட்ட அதிமுக என்னும் கட்சியானது கருத்து வேறுபாடுகளால் உடைந்து விடக் கூடாது. கட்சியைக் காப்பாற் றும் வகையில் தற்போது பொதுச் செயலராக சசிகலா ஒருமனதாகத் தேர்தெடுக்கபட்டுள்ளார். அவ ருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்," என்றார் சுதா. புதுப் பொறுப்பை ஏற்றுள்ள சசிகலாவுக்கு இன்னும் அவகாசம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் சசிகலா எப்படிச் செயல்படுகிறார் என்பதை காலப்போக்கில் கணிக்க வேண்டும் என்றார். "மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் மரணத்தில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக தீபா கூறுவதெல் லாம் அவரது தனிப்பட்ட கருத்து," என்று சுதா மேலும் தெரிவித்தார்.

எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!