மெரினா கலவரம்: மேலும் 12 பேருக்கு நிபந்தனை பிணை

சென்னை: மெரினா கலவரத்தின் போது காவல்துறையால் கைது செய்யப்பட்ட 12 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்க ளுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. அண்மையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்து தொடர் போராட்டங்களை நடத்தினர். எனினும் 8 நாட்கள் நீடித்த இப்போராட்டம் வன் முறையில் முடிந்தது. இதையடுத்து போலிசார் தடி யடி நடத்தி கூட்டத்தைக் கலைத் தனர். அப்போது காவல் நிலையம், வாகனங்களுக்குத் தீ வைக்கப் பட்டது. போலிசாரின் தடியடியில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதே போல் வன்முறையாளர் கள் கல் வீசித் தாக்கியதில் போலிசாருக்கும் காயம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தின் பேரில் பலரை போலிசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது வன்முறை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவானது. இந்நிலையில் மயிலாப்பூர் பகுதி காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில் 27 பேர் ஏற் கெனவே பிணை பெற்றுள்ளனர். மேலும் 12 பேர் பிணை கேட்டு முதன்மை நீதிமன்றத்தை அணுகி அங்கு தங்கள் பிணைக்கான மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில் மைலாப் பூர் காவல் நிலையத்தில் தினமும் முன்னிலை யாகும் நிபந்தனையுடன் 12 பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!