அடுத்த வாரம் தீர்ப்பு: சசிகலா இன்று முதல்வர் பதவி ஏற்க அவசர ஏற்பாடுகள்

தமிழக முதல்வராக வி.கே.சசிகலா இன்று பதவி ஏற்பதற்கான ஏற் பாடுகள் அவசரமாக நடைபெற்று வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக அதிமுக எம்எல்ஏக் களால் நேற்று முன்தினம் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அப்பதவியை விட்டு விலகினார். பன்னீர்செல்வத்தின் விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவ் நேற்று கடிதம் மூலம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ கத்தின் முதல்வராக சசிகலா பதவி ஏற்பது குறித்த ஆலோசனை கள் தொடங்கின. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று முன்தினமும் நேற்றும் சசிகலாவைச் சந்தித்து பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். சசிகலா பெயரிலான டுவிட்டர் பதிவில் நாளை (இன்று) முதல் வராகப் பதவி ஏற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது சசிகலாவின் அதிகாரபூர்வ டுவிட் டர் பக்கம்தானா என்று உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே, அதிமுக பெதுச் செயலாளர் சசிகலா உள்பட நான்கு பேர் மீதான செத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப் படும் என உச்ச நீதிமன்றம் அதிர டியாக அறிவித்துள்ளது. இதனால் சசிகலா முதல்வராக பதவியேற் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!