மூன்றாவது பெண் முதல்வர்: 3 முறை பதவி இழந்த ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல் வராக சசிகலா பொறுப் பேற்க உள்ள நிலையில், மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவைச் சேர்ந்த ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா இருவரும் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்துள்ளனர். கடந்த 1987ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் காலமான பின்னர், அவரது மனைவி வி.என். ஜானகி முதல்வராக பொறுப்பேற்றார். இவர்தான் தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர். இதையடுத்து அதி முகவை கைப்பற்றிய ஜெய லலிதா தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது பெண் முதல்வராக பொறுப்பேற்றார். ஒட்டுமொத்தத்தில் ஆறு முறை முதல்வராக பதவி வகித்தார்.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அவர் காலமானதை அடுத்து, அதிமுகவில் பல் வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்து தமிழகத்தின் மூன்றாவது பெண் முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளார். இதற்கிடையே ஜெய லலிதா சிறைக்குச் சென்ற தால் இருமுறை முதல்வர் பதவி வகித்த பன்னீர்செல் வம், ஜெயலலிதா காலமான பின்னர் மூன்றாவது முறை யாக முதல்வர் ஆனார். எனினும் மூன்று முறையும் அவர் தன் பதவியை விட் டுத்தர வேண்டியதாகிவிட் டது. தமிழகத்தில் இதுவரை இருந்த பெண் முதல்வர்கள் அனைவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!