1000 ரூபாய் நோட்டு வராது

1000 ரூபாய் நோட்டை மீண்டும் வெளி யிடுவதற்கான சாத்தியமில்லை என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள் ளது. நவம்பர் 8ஆம் தேதி ஒழிக்கப் பட்ட ரூ.1000 நோட்டுகள் புதிய வடி வில் மீண்டும் வெளிவரும் என கூறப்பட்டு வரும் வேளையில் அர சாங்கம் அதனை மறுத்துள்ளது. நவம்பரில் 500 ரூபாயும் ஒழிக்கப் பட்டது. ஆனால், உடனடியாக அது புது வடிவத்துடன் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்பட்டது.

500 ரூபாயைப்போல 1000 ரூபாய் நோட்டும் புதிய வடிவில் வெளிவரும் என்ற தகவலில் உண்மை இல்லை என்று பொருளியல் விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். 500 ரூபாய் நோட்டுகளையும் அதற்குக் குறைந்த மதிப்பிலான நோட்டுகளையும் அச்சிட்டு வெளி யிடுவதில் மட்டுமே தற்போதைக்குக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், 1000 ரூபாய்க்குப் பதில்தான் 2000 ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டதாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!