கோயில் திருவிழாவில் 65 அடி தேர் கவிழ்ந்து பலர் காயம்

பெல்லாரி: கோயில் திருவிழாவின் போது 65 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் (படம்) காணொளியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெல்லாரி யில் உள்ள குரு கொட்டுரேஸ்வரா கோயில் தேர் திருவிழாவில் 65 அடி தேர் கவிழ்ந்தது. தேர் திருவிழாவைக் காண மாநிலத்தின் அனைத்துப் பகுதி களில் இருந்தும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் திரண்டனர். கலந்துகொண்ட பக்தர்கள் பக்தியுடன் வடம் பிடித்து தேரை இழுத்துக் கொண்டிருந்தபோது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது சரிந்ததால் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் 10 பேர் காய மடைந்துள்ளதாக முதற்கட்ட தக வல்கள் கூறின. விபத்தால் ஏற் பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!