நெடுவாசல் போராட்டம்: ஊர்வலம், ஒப்பாரி; மத்திய அரசுக்குப் பெண்கள் எச்சரிக்கை

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார் பன் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் கறுப்புக் கொடியுடன் ஊர்வலம் நடத்தி மத்திய அர சுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளனர். நெடுவாசல் கிராமம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு புதுக் கோட்டை மாவட்ட பொது மக்க ளும், மாநிலம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி களைச் சேர்ந்தவர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இத்திட்டத்துக்கு எதிராக கடந்த 22 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கறுப்புக் கொடியுடன் ஊர்வலம் நடத்தினர். இதில் ஆண்களும் கணிசமான எண்ணிக்கையில் பங்கேற்றனர். "மத்திய மாநில அரசுகளே, உங்கள் கண்களுக்கு எங்களின் போராட்டம் தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் நன்றாக நடித்து எங்களை ஏமாற்றுகிறீர் களா?" எனும் முழக்கங்களை பெண்கள் எழுப்பினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!