டி.டி.வி. தினகரன்: ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடுவேன்

சென்னை: ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். "எப்பொழுது தேர்தல் நடந்தாலும் அங்கு மீண்டும் நானே போட்டியிடுவேன்," என்றார் அவர். அண்மையில் ஆர்.கே. நகர் தொகுதியில் ஏராளமான பணப் பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கு நேற்று முன்தினம் வந்த டி.டி.வி. தினகரன், செய்தியாளர் களிடம் பேசினார். "ஆர்.கே.நகரில் எப் பொழுது தேர்தல் நடந்தாலும் 'அதிமுக அம்மா' அணி சார்பாக மீண்டும் நானே போட்டியிடுவேன்," என்று அவர் கூறினார். தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று ஸ்டாலின் கூறியதற்குப் பதில் அளித்த அவர், "அவர் எப்பொழுது ஜோசியராக மாறினார்," என்று கேள்வி எழுப்பினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!