ஓபிஎஸ் திட்டவட்டம்: சசிகலா குடும்பத்தை துரத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை

தமிழக அரசியலில் ஆக அண்மைய திருப்புமுனையாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா வையும் அவரது குடும்பத்தினரை யும் ஒட்டுமொத்தமாக அக்கட்சியி லிருந்தே கழற்றிவிடுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் இரவு இதற் காக நடந்த ஆலோசனையில் 26 அமைச்சர்களும் சில எம்எல்ஏக் களும் பங்கேற்றனர். பிளவுபட்ட அதிமுகவை ஒன்றி ணைக்கும் முயற்சிகளுக்கு ஓ.பன் னீர்செல்வம் சம்மதம் தெரிவித் ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இருதரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இருதரப் பிலும் அமைக்கப்பட்டுள்ள குழுக் கள் சந்தித்துப் பேசி முதல்வர் பதவி குறித்தும் கட்சிப் பதவிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். இணைப்புக்கு ஓபிஎஸ் தரப்பில் போடப்படும் ஒரே முக்கிய நிபந் தனை சசிகலாவை ஓரங்கட்டுவது தான். ஆட்சியும் அதிகாரமும் சசி கலாவிடமோ அவரால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட டிடிவி தினகரனிடமோ இருக்கக்கூடாது என்கிறது ஓபிஎஸ் அணி. பெரியகுளத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபி எஸ், "எந்த ஒரு குடும்பத்தின் கையிலும் அதிமுக சென்றுவிடக் கூடாது. சசிகலா குடும்பத்தினர் தலையீடு கட்சியில் இருக்கும்வரை பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை," என்று கண்டிப்புடன் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!