கைதான மல்லையா பிணையில் விடுதலை

லண்டன்: கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே விஜய் மல்லையா நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிச் சென்றார் தொழிலதிபர் விஜய் மல்லையா. கொடுத்த கடனுக்காக, விஜய் மல்லையாவின் சொத்துகளை இந்திய வங்கிகள் முடக்கியுள்ளன. தற்போது அவை ஒவ்வொன்றாக ஏலத்துக்கு விடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் நேற்று காலை விஜய் மல்லையாவை லண்டனில் கைது செய்தனர். இதையடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே மல்லையா நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!