சுகேஷ் சந்தர் மீது 50 வழக்குகள் பதிவு

புதுடெல்லி: தினகரன் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத் தர தேர்தல் ஆணை யத்துக்கு லஞ்சம் தர முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி யுள்ள சுகேஷ் சந்தர் மீது 4 மாநி லங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள தாகக் கூறப்படுகிறது. மேலும், தாம் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் என் றெல்லாம் கூறி அவர் மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தக வல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட சுகேஷ், நாடு முழு வதும் பல்வேறு பகுதிகளிலும் தனது கைவரிசையைக் காட்டியுள் ளார். மாநில அரசுகளிடம் தமக்கு நெருக்கமான தொடர்புகள் உண்டு என்று தொழிலதிபர்களை நம்ப வைத்து, பல காரியங்களைச் சாதித்துக் கொடுப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!