டெல்லி மாநகராட்சித் தேர்தலில் மந்தமான வாக்குப் பதிவு

புதுடெல்லி: டெல்லியில் மாநகராட்சிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய அணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஒரு கோடிக்கும் மேலான வாக்காளர்களைக் கொண்டுள்ள டெல்லி மாநகராட்சியில் 1.1 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்குரிமை பெற்றனர்.

டெல்லியில் உள்ள 272 தொகுதிகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற ராஜோரி இடைத்தேர்தலிலும் மேலும் இரண்டு மாநகராட்சித் தேர்தல்களிலும் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. இதனிடையே நேற்றைய தேர்தலில் குறைவான வாக்குகளே பதிவானதாகக் கூறப்பட்டது. இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 4 மணிவரை 42% வாக்குகளே பதிவானதாக தகவல்கள் வெளியாகின. எதிர்வரும் புதன்கிழமை வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!