வெயில்: தமிழகம் முழுவதும் களைகட்டும் நுங்கு விற்பனை

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் வெயி லின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நுங்குகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது (படம்). அடுத்த சில தினங்களில் தொடங்க உள்ள அக்னி நட்சத்திரம் மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற் போது உள்ளதை விட வெப்பத்தின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்ச ரித்துள்ளது. இந்நிலையில் சேலம், கிருஷ்ண கிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங் களில் வெயில் காலத்துக்கு ஏற்ற நுங்குகளின் விற்பனை களைகட்டி உள்ளது. இம்முறை வழக்கத்தை விட இவற்றின் விலை சற்றே குறை வாக உள்ளது எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். இதே போல் இளநீர், பதநீர், வெள்ளரி, கம்மங்கூழ் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. நேற்றும் சென்னையில் வெயில் சுட்டெரித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!