கெஜ்ரிவால் ரூ.2.5 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு

புதுடெல்லி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் பெற்றதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் பரபரப்புக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். "அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் இருந்து முதல்வர் கெஜ்ரிவால் ரூ.2.5 கோடி லஞ்சம் பெற்றார். என் கண் எதிரில் தான் சத்யேந்திர ஜெயின் லஞ்ச பணத்தை கொடுத்தார்," என டெல்லியில் அமைச்சர் பதவி யிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா கூறியுள்ளார். டெல்லி சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கபில் மிஸ்ரா. ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக இவர் நேற்று முன்தினம் அதிரடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று துணைநிலை ஆளுனரை மிஸ்ரா சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரா, "சக அமைச்சரான சத்யேந்திர ஜெயின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரூ.2.5 கோடியை லஞ்சமாகக் கொடுத்தார். ரூ.50 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெறு வதற்காக சத்யேந்திர ஜெயின் லஞ்சத்தைக் கொடுத்துள்ளார். "இது பற்றி நான் கேட்டதற்கு முதலில் பதில் சொல்ல மறுத்த கெஜ்ரிவால் பின்னர் அரசியலில் இது எல்லாம் சாதாரணம் எனக் கூறினார்.

"கெஜ்ரிவால் என்னை அமைச் சரவையில் இருந்து நீக்கியது தவறு. அவர் கட்சியில் குடும்பத் தினருக்கே முக்கியத்துவம் அளிக்க நினைக்கிறார். "நான் அமைச்சராகப் பொறுப் பேற்றதும் ‌ஷீலா தீட்சித் பற்றி கெஜ்ரிவாலிடம் அறிக்கை அளித் தேன். "ஆம்ஆத்மி என் கட்சி. இதில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. எதற்காக பணம் வாங்கினார் என்ற உண்மையைக் கெஜ்ரிவால் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!