சென்னையில் தொடங்குகிறது சுரங்க ரயில் போக்குவரத்து

சுரங்க ரயில் போக்குவரத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்க உள்ளது. திருமங்கலம் நிலையம் முதல் நேரு பூங்கா நிலையம் வரையில் 7.63 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்கள் செல் லும். இதற்கான தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு முதல் சுரங்கப் பாதை ரயிலுக்குப் பச்சைக்கொடி காட்ட உள்ளனர். அதன் பின்னர் பயணிகளுக்கான சுரங்க ரயில் போக்குவரத்து உட னடியாகத் தொடங்கும். குளிரூட்டி வசதியுடன் அகன்ற கண்ணாடி வழியாக பார்த்தவாறு சுரங்கத்திற் குள் பயணம் செய்வது சென்னை வாசிகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த சுரங்க வழித்தடத்தில் அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சை யப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா போன்ற ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றில் திருமங்கலம்=ஷெனாய் நகர் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நிலையங்களுக்கு இடையில் மட்டும் இரு மார்க்கமாக சுரங்க ரயில் போக்குவரத்து இருக் கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வு கடந்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வை மேற்கொண்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் பணி கள் தொடர்பாக திருப்தி தெரிவித் ததுடன் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கினார்.

சுரங்கப் பாதையில் நடைபெற்ற ரயில் சோதனை ஓட்டம். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!