சிறைத் தண்டனையை எதிர்த்து நீதிபதி கர்ணன் மனு

புதுடெல்லி: நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் வழங் கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையைத் திரும்பப் பெறவேண்டும் என கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதி பதி கர்ணன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதச் சிறை தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கோல்கத்தா காவல் துறையினர் அவரை கைது செய்ய சென்னை வந்தனர். ஆனால், கர்ணன் இருப்பிடம் தெரியாததால் அவரை கைது செய்ய திணறி வருகின்றனர். இந்நிலையில், கர்ணன் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், “உச்ச நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனையைத் திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து கர்ணன் அதிபரைச் சந்திக்க உள்ளார்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.