சவூதியில் 41 லட்சம் இந்தியர்களைப் பாதிக்கும் குடும்ப வரி அறிமுகம்

ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் வேலை செய்து வரும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குடி யேறுவது வழக்கம். ஆனால் குடும்ப வரி அறிமுகம் ஆவதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது குடும்பத்தினரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் முடிவில் உள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் பணிபுரி வோர் மாத வருமானம் 5,000 ரியால் (ரூ.86,000) வாங்கினால் மட்டுமே குடும்பத்துடன் குடியேற அனுமதி வழங்கப்படும். தற்போது அந்நாட்டில் 41 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். சவூதியில் உள்ள ஆகப்பெரிய வெளிநாட்டுவாசிகள் குழு இந்தியர்கள்தான். ஜூலை 1ஆம் தேதி முதல் குடும்ப வரி என்றழைக்கப்படும் 'உடன் சார்ந்தோர் வரி' என்னும் புதிய அம்சத்தை சவூதி அரேபிய அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்வோருடன் தங்கி இருக்கும் மனைவி, தாய், தந்தை, பிள்ளைகள் ஆகிய ஒவ்வொருவருக்கும் மாதந் தோறும் 100 ரியால் (ரூ.1,700) வரி யாக வசூலிக்கப்படும் என சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் விசா புதுப்பிக்கப்படும் போது உடன் தங்கியிக்கும் ஒவ் வொருவருக்கும் ஓராண்டுக்கு 1,200 ரியால் என்ற கணக்கில் முன்கூட்டியே மொத்தமாகச் செலுத்திவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மனைவி மற்றும் இரு பிள்ளை களுடன் வசிக்கும் ஒருவர் ஓராண் டுக்கு 3,600 ரியால் (கிட்டத்தட்ட ரூ.62,000) தொகையை உடன் சார்ந்தோர் வரியாக முன்கூட்டியே செலுத்த வேண்டும். மேலும் ஆண்டுதோறும் 100 ரியால் என்ற கணக்கில் கூடிக் கொண்டே போய் 2020ஆம் ஆண் டுக்குள் ஒரு நபருக்கான உடன் சார்ந்தோர் வரி 400 ரியாலாக (ரூ.6,900) உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!