கடன் தள்ளுபடிக்கு இடைக்கால தடை

சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் அனைத்தையும் கூட்டுறவு வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் இவ்வாறு தடை விதித்தது. ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனை தமிழக அரசு ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்தே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது என்பது குறிப்பிடத்தக்கது.