ஆறுகுட்டி எம்எல்ஏ: ஓபிஎஸ் புறக்கணித்ததால் அணி மாறுகிறேன்

கோவை: அரசியலில் திடீர் திருப்பமாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி எம்எல்ஏ அந்த அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “ஓபிஎஸ் அணி என்னைப் புறக்கணிப்பதால் நான் அவர்களை புறக்கணிக்கிறேன்,” என ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஓபிஎஸ் தன்னை அழைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டதாக புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதன் காரணமாக ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிவிட்டதாகக் கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியிலிருந்து ஆறுகுட்டி விலகியதால் அந்த அணியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது.

Loading...
Load next