கஜாவை அடுத்து பெதாய் புயல் எச்சரிக்கை

சென்னை: அண்மையில்தான் கஜா புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களையும் சீர்குலைத்துச் சென்றது. இப்போது மீண்டும் ஒரு புயல் பெத்தாய் என்ற பெயரில் மீண்டும் தமிழகத்தை புரட்டிப் போட உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சுழன்றடித்த கஜா புயல் விட் டுச்சென்ற வடுக்கள் மறை வதற் குள் அடுத்த புயல் தமிழகத்தை தாக்குவதற்கு தயாராகி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை 15ஆம் தேதியும் நாளை மறுநாள் 16ஆம் தேதியும் தமிழகத்தின் கடலோர மாவட்டங் களில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் புயல் காற்றாக வீசக் கூடும் என ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச் சந்திரன் கூறுகையில், “தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. “இந்த காற்றழுத்த தாழ்வுமண்ட லமானது மேலும் வலுவடைந்து இன்று சென்னை, வட தமிழகம் நோக்கி நகரத் தொடங்கும். அடுத்த 48 மணிநேத்தில் இது வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும். “இதன் காரணமாக 15, 16ஆம் தேதிகளில் சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம் ஆகிய கடலோர மாவட்டப் பகுதிகளில் மிக கனமழையுடன் பலத்த காற்றும் வீசும். இதனால் மீனவர்கள் கடும் இழப்பைச் சந்திக்க நேரிடும். கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது நல்லது,” என்று தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மும்பையில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன்ராவ் புதிய இந்திய அழகியாகத் தேர்வு பெற்றுள்ளார். படம்: யுடியூப்

17 Jun 2019

இந்திய அழகியாக வாகை சூடினார் ராஜஸ்தானைச் சேர்ந்த 22 வயது சுமன்ராவ்