திமுகவில் சேர்ந்தார் செந்தில் பாலாஜி

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வரை டிடிவி தினகரனின் ஆதரவாளராக தம்மை அடையளப்படுத்திக் கொண்டார் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தினகரன் துணைப் பொதுச்செயலாளராக உள்ள அமமுகவில் இருந்து திடீரென விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியில் இணையும் நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த இணைப்பின் மூலம் மக்களின் விருப்பத்தை, தாம் நிறைவேற்றி இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மு.க. ஸ்டாலின் தொண்டர் களை அரவணைத்துச் செல்லும் நல்ல தலைவர் என்றும், ஸ்டா லினை சிறந்த தலைவராகத் தாம் பார்ப்பதாகவும் செந்தில் பாலாஜி புகழ்ந்தார். “ஜெயலலிதாவின் மறை வுக்குப் பின் ஓர் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன். எனி னும் தற்போது திமுக மீதான ஈர்ப்பு காரணமாக அக்கட்சியில் சேர்ந்துள்ளேன். நான் திமுகவில் இருக்க வேண்டும் என்பது தான் கரூர் மாவட்ட மக்களின் விருப்ப மாகவும் உள்ளது,” என்றார் செந்தில் பாலாஜி.