அமிர்தசரசில் நாய்களையும் வாட்டும் கடுங்குளிர்

அமிர்தசரஸ்: இந்தியாவில் இப்போது பின்பனிக் காலமாக இருப்பதால் அதிகாலை வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற இடங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து, கடந்த சில நாட்களில் அது 16 டிகிரி செல்சியசுக்கும் கீழே சென்றது. அடர்ந்த மூடுபனி காரணமாக கடந்த வியாழக்கிழமை அமிர்தசரசில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி அனைத்துலக விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமானம் ஒன்று புதுடெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டது. சுமார் 13 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. அமிர்தசரஸ் தெரு ஒன்றில் மனிதர்கள் குளிர்காய்ந்து விட்டுச் சென்ற தீயில் தெருநாய்க் கூட்டமும் குளிர்காய்ந்த காட்சி, குளிருக்கு நாய்களும் விலக்கல்ல என்பதை விளக்கியது. படம்: இபிஏ