மோடி ஆந்திராவை ஏமாற்றிவிட்டார், அம்பானிக்குத் தந்துவிட்டார் - ராகுல் காந்தி

புதுடெல்லி: ஆந்திர மாநிலத் துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப் படும் என  மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றாத மோடி தலைமை யிலான அரசைக் கண்டித்து புதுடெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். புதுடெல்லியில் உள்ள ஆந்திர இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத் துக்குப் பல்வேறு கட்சி தலை வர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துனர்.

அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு=காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மஜீத் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரேக் ஓ பிராயன், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ்,  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து அவரது கோரிக்கை  வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது உண்ணாவிரதப் பந்தலில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுவதற்காக நாடாளுமன்றத்தில் முன்பு விவாதம் நடைபெற்றபோதே ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித் திருந்தன.

“எனவே, எங்கள் அரசு அளித்த வாக்குறுதியை இனியும் தாமதிக்காமல் பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். 
“இதற்காகப் போராட்டம் நடத்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு எங்களது முழுமையான ஆதரவு உண்டு,” என்று தெரிவித்தார்.
“இதையடுத்து  பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் ஒரு பொய்யைக் கூறி வருகிறார். 

“ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறிமாறி செல்லும் அவர் பொய்களை மாற்றி மாற்றிப் பேசுகிறார். ஆந்திராவுக்குப் போகும்போது சிறப்பு அந்தஸ்து பற்றி பொய் பேசுகிறார். அவரது நம்பகத்தன்மை முற்றிலுமாக அழிந்துபோய் விட்டது. 
“ஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியைத் தொழிலதிபர் அம்பானிக்குப் பிரதமர் மோடி கொடுத்துவிட்டார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய அரசாங் கமும் மறுத்துள்ளது. அதேபோல அம்பானியும் மறுத்துள்ளார்.

பிரான்சிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்கிய போது அதில் ஊழல்  நடந்ததாக ராகுல் காந்தி குற்றம் சுமத்தி வருகிறார்.
அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறாது என்று அடித்துக்கூறுகிறார் ராகுல் காந்தி. ஆனால் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவிக்கும் பாஜகவினர், ராகுல் காந்தி தங்கள் கட்சி மீது வீண் பழி சுமத்துவதாகக் கூறுகின்றனர்.

Loading...
Load next