குழப்பத்தில் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் காஷ்மீர் மக்கள்

அண்மையில் காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற் றம் அதிகரித்துவரும் நிலையில் காஷ்மீர் மக்கள் பெருங்குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
அரசாங்க அறிவிப்புகள் வெளி யில் கசிந்ததே அவர்களின் குழப் பத்துக்குக் காரணம். போதுமான மருந்துகள் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்துமாறு மருத்துவ மனைகளைக் கேட்டுக்கொள்ளும் அறிவிப்பும் போதுமான உணவு கையிருப்பை உடனடியாக அதி கரிக்குமாறு உணவு விநியோகத் துறைக்கு உத்தரவிட்ட அறிவிப்பும் சமூக ஊடகங்களில் வெளியான தால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களை வாங்கி வீடுகளில் இருப்பு வைத்துக் கொள்ளும் நோக்குடன் கடை களை நோக்கி அவர்கள் நேற்று படையெடுத்தனர். மளிகைக் கடை களின் முன்னால் நீண்ட வரி சைகள் காணப்பட்டதாக ஊடகங் கள் கூறின. மற்றொரு தரப்பினர் எரிபொருட்களை வாங்கி வைக்க பெட்ரோல் நிலையங்கள் முன் வரிசை பிடித்து நின்றனர்.
காஷ்மீர் முழுவதும் பத்தாயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.