தந்தையிடம் ஓய்வூதியத்தை மிரட்டி கேட்ட ஆடவர்

வயதான தந்தையின் ஓய்வூதியத்தை அவரது மகன் மிரட்டி கேட்பதைக் காட்டும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சந்திர்லபாடு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தந்தையின் பெயர் மெஹபூப் சாஹிப் என்றும் மகனின் பெயர் ஷேக் ஷீலாத் என்றும் இந்திய இணையத்தளங்கள் குறிப்பிடுகின்றன.

வேலையில்லாமல் மதுபானம் குடித்துக்கொண்டு திரிவதாகக் கூறப்படும் ஷேக், தனது 70 வயது தந்தையின் கழுத்தை நெரிப்பது போன்ற ஒரு காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. மகனின் செயலைக் கண்ட அவனது தாயார் கதறி அழுவதையும் இந்தக் காணொளி காட்டுகிறது.

சம்பவத்தை விசாரித்த போலிசார் ஷேக்கைக் கைது செய்துள்ளனர்.