கோல்கத்தாவில் ‘பணமழை’; நோட்டுகளை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஓரிடத்தில் கொட்டிய ‘பணமழை’யைக் கண்டு ஆனந்தத்தில் திளைத்த அந்தப் பகுதி மக்கள், தங்களால் இயன்றவரை பணத்தை எடுத்துக்கொண்டு சென்றனர்.

கொல்கத்தாவில் உள்ள ‘ஹாக் மெர்கன்டைல்’ எனும் ஏற்றுமதி நிறுவனத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (நவம்பர் 20) பிற்பகலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

Remote video URL

ஆறாவது மாடியில் இருக்கும் அந்த நிறுவனத்தின் சன்னல் வழியாக அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ2,000 நோட்டுகளை வெளியே வீசினார்.

ரூபாய் நோட்டுகள் பறந்ததால் ஏற்பட்ட ‘பணமழை’ மக்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்தக் காட்சிகளை சிலர் கைபேசியில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

அதிகாரிகளின் சோதனை குறித்து விசாரித்தபோது, கூடுதல் இயக்குனர் தீபாங்கர் அரோன் தலைமையில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாகவும், அதில் பல கள்ளக்கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், ஊழியர்கள் வீசியெறிந்த பணம் சுமார் ரூ.4 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!