நிர்பயா விவகாரம்: நால்வருக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு

புதுடெல்லி: நிர்பயா சம்பவக் குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு புதுடெல்லி நீதிமன்றம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கெனவே இரு முறை தேதி குறிப்பிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று 3வது முறையாக புதிய தேதி அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவப் படிப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் அக்சய் தாகூர், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 

தூக்குத் தண்டனை, கடந்த ஜனவரி 22ஆம் தேதி நிறைவேற்றப் படவிருந்த நிலையில், அது பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்  பட்டது. குற்றவாளிகள் தரப்பில் எதிர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதே அதற்குக் காரணம். 

அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து தண்டனை தேதி தற்போது வெளியாகியுள்ளது.