இந்திய விமான நிறுவனங்கள் நொடித்துப்போகும் நிலை: அவசர தகவல்

இந்திய விமான நிறுவனங்கள் நொடித்துப்போகும் நிலை: அவசர தகவல்

1 mins read
4cba8215-bb08-487a-9c61-bce20e4b2646
இந்­தி­யா­வின் விமான நிறு­வ­னங்­கள் இப்­போது படு­மோ­ச­மாக ஆபத்­தான கால­கட்­டத்­தில் இருப்­ப­தாக அனைத்­து­லக விமானப் போக்குவரத்துச் சங்கம், (IATA) பிர­த­மர் மோடி­யி­டம் அவ­சர அவ­ச­ர­மா­கத் தெரி­வித்­துள்­ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வின் விமான நிறு­வ­னங்­கள் இப்­போது படு­மோ­ச­மாக ஆபத்­தான கால­கட்­டத்­தில் இருப்­ப­தாக அனைத்­து­லக விமானப் போக்குவரத்துச் சங்கம், (IATA) பிர­த­மர் மோடி­யி­டம் அவ­சர அவ­ச­ர­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித்தொற்று கார­ண­மாக விமா­னப் பய­ணங்­கள் தடைபட்டுள்ளன. அத­னால் இந்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து துறை­யில் 5.75 லட்­சம் வேலை­கள் பறி­போகும் நிலை ஏற்­பட்டு இருக்­கிறது என்று அந்த உலக நிறு­வ­னம் இந்­தி­யப் பிர­த­மரை எச்­ச­ரித்து இருக்­கிறது.

கிருமி பரவல் மிரட்­டல் கார­ண­மாக 2020ல் இந்­தி­யா­வில் விமா­னப் போக்­கு­வரத்து துறை­க்­குப் பயணிகள் குறைவு கார­ண­மாக US$2.1 பில்­லி­யன் இழப்பு ஏற்­படும் என்­றும் பய­ணி­கள் எண்­ணிக்கை 9% குறைந்து விடும் என்­றும் சங்­கம் மதிப்­பி­டு­கிறது.

இதை அந்­தச் சங்­கத்­தின் தலைமை இயக்­கு­நர் அலெக்­சாண்­டர் டி ஜுனிக் ஒரு கடி­தம் மூலம் இந்­தி­யப்­ பி­ர­த­ம­ருக்குத் தெரி­வித்து இருக்­கி­றார்.