ஊரடங்கு முடிந்ததும் உடனே வழக்கநிலை திரும்ப வியூகம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக நடை­மு­றைக்கு வந்­துள்ள 21 நாள் ஊர­டங்கு ஏப்­ரல் 14ஆம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது.

அந்த உத்­த­ரவு மேலும் நீட்­டிக்­கப்­ப­டாது என்று மத்­திய அர­சாங்­கம் தெரி­வித்து இருக்­கிறது.

இந்த நிலை­யில், ஏப்­ரல் 14க்கு பிந்­தைய கால­கட்­டத்­தில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பை மேம்­ப­டுத்­த­வும் பொரு­ளி­யலை வளர்ச்சிப் பாதை­யில் திருப்­பி­வி­ட­வும் மக்­க­ளுக்கு கொரோனா கார­ண­மாக ஏற்­பட்டுள்ள பாதிப்­பு­க­ளை­யும் சிர­மங்­களை­யும் குறைக்­க­வும் தேவை­யான நட­வ­டிக்­கை­க­ளைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக பிர­த­மர் அலு­வ­ல­கம் வெவ்­வே­றான 10 உயர்­நி­லைக் குழுக்­களை அமைத்­துள்­ளது.

அந்­தக் குழுக்­கள், பிர­த­ம­ரின் பிர­தான செய­லா­ள­ரான பி. கே. மிஸ்ரா தலை­மை­யில் அவ­ரு­டைய வழி­காட்­ட­லின் பேரில் பல்­வேறு அம்­சங்­கள் குறித்து ஆய்வு நடத்­தும் என்று தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்து இருக்­கின்­றன.

இந்­தி­யா­வில் 21 நாள் ஊர­டங்கு முடி­வுற்­ற­தும் இமா­ல­யப் பிரச்­சி­னை­கள் தலை­தூக்­கும் என்றும் மத்­திய, மாநில அர­சாங்­கங்­கள் பெரும் பெரும் சவால்­க­ளைச் சமா­ளிக்க வேண்டி இருக்­கும் என்­றும் வல்­லு­நர்­கள் கூறு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், இந்த 10 குழுக்­களும் தங்­கள் தங்­க­ளுக்­கு­ரிய துறை­களில் முழு கவ­னம் செலுத்தி கூடு­மான வரை­யில் வழமை நிலையை நிலை­நாட்ட அய­ராது பாடு­படும் என்­றும் பிர­த­மர் அலு­வ­ல­கம் தெரி­வித்து உள்­ளது.

ஏழை­க­ளுக்­கான நல்­வாழ்­வுத் திட்­டங்­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பில் இடம்­பெற வேண்­டிய முயற்­சி­கள், பொரு­ளி­யலை உசுப்­பி­வி­டு­வ­தற்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­கள், உள்­ளிட்ட பல­வற்­றை­யும் முன்னெடுக்க குழுக்­கள் அமைக்­கப்­பட்ட உட­னேயே சுமார் 20 துறைச் செய­லா­ளர்­களும் இதர 40 அதி­கா­ரி­களும் பணி­யில் இறங்­கி­விட்­டார்­கள் என்று தக­வல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன.

ஒவ்­வொரு குழு­வி­லும் ஆறு உறுப்­பி­னர்­கள் இருப்­பார்­கள். பிர­த­மர் அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த ஒரு அதி­கா­ரி­யும் குழு­வில் இருப்­பார்.

அமைச்­ச­ர­வைச் செய­லா­ள­ரும் இடம்­பெற்று இருப்­பார்,

இதனால் முழு அள­வில் ஒருங்­கி­ணைப்­பும் ஒத்­து­ழைப்­பும் இருக்­கும் என்­றும் ஆகை­யால் அந்த 10 குழுக்­களும் பரிந்­து­ரைக்­கும் நட­வ­டிக்­கை­கள் உட­னுக்­கு­டன் நடை­மு­றைக்கு வர வச­தி­கள் இருக்­கும் என்­றும் தகவல் வட்டாரங்கள் தெரி­வித்து உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!