மதுப் பிரியர்கள் 100 பேரின் மனநிலை பாதிப்பு

ஹைதராபாத்: 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஹைதராபாத்தில் மது குடிக்க முடியாததால் 100 பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் அங்குள்ள ஐ.எம்.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்த முடியாததால் அவர் களது உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மனநிலை பாதிக்கப் பட்ட சிலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். பாதிக்கப்பட்டவர் களில் பெரும்பாலானோர் 22 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட கூலித்தொழி லாளர்கள்.