சுடச் சுடச் செய்திகள்

'இந்தியாவில் முறையாக கை கழுவ வசதி இல்லாத நிலையில் 5 கோடி மக்கள்'

இந்தியாவில் முறையாக கை கழுவுவதற்கான சோப்பு, தூய்மையான தண்ணீா் போன்ற வசதிகள் இல்லாத நிலையில் 50 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

சோப்பில் அழியக்கூடிய தன்மை கொண்ட கொரோனா கிருமிப் பரவலிலிருந்து காத்துக்கொள்ள, அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவு அதிா்ச்சியளிப்பதாக உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உலக அளவில் சுமார் 2 பில்லியன் மக்களுக்கு இத்தகைய வசதிகள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா கிருமித்தொற்றில் இருந்து காத்துக் கொள்ள மக்களிடம் எந்த அளவுக்கு வசதிகள் உள்ளது என்பது தொடா்பாக ஆராயப்பட்டது.

அதில், ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களில் 47 நாடுகளில் முறையாக கை கழுவுவதற்கான வசதி கூட இல்லாமல் பாதியளவு மக்கள் இருப்பது தெரியவந்தது. 

இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தலா 5 கோடி போ் கை கழுவுவதற்கான சோப்பு, தூய்மையான தண்ணீா் வசதி இல்லாமல்தான் வாழ்ந்து வருகின்றனா். 

சிலருக்கு தற்சமயம் கிருமிநாசினி, தண்ணீா், சோப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 

கை கழுவும் வசதி இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கரோனா தொற்று பரவி பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சௌதி அரேபியா, மொராக்கோ, நேபாளம், தான்சானியா ஆகிய நாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் பொது சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன.

இந்த ஆய்வில் பள்ளி, பணியிடங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இத்தகைய வசதிகள் உள்ளனவா என்பதைக் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon