தமிழகக் காவல்துறையினர் 1,500 பேருக்குத் தொற்று

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் குறைந்தது 1,500 காவல்துறையினரை கொவிட்-19 கிருமி தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களின் குடும்பத்தார் அல்லது நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் வகையிலும் கிட்டத்தட்ட 1,500 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சென்னை மாநகரில் மட்டும் நான்கு இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரிகள் உட்பட 830 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறின.

சென்னை தெற்கு மண்டலத்திற்கான காவல்துறை இணை ஆணையரையும் ராயபுரம் காவல்துறை ஆய்வாளரையும் கொரோனா கிருமி தொற்றியிருப்பது நேற்று (ஜூன் 20) உறுதியானது.

முன்னதாக, சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல்துறை ஆணையரும் தியாகராய நகர், அண்ணா நகர், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளின் காவல்துறை உதவி ஆணையர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வாகனச் சோதனை, மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு, வழக்கமான காவல் நிலையப் பணிகள் உள்ளிட்ட முன்களப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர் என்றும் அறிகுறியின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் மூலமாக அவர்களைக் கிருமி தொற்றியிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

“காவல்துறையினருக்குப் போதிய அளவிற்கு முகக்கவசங்கள், கையுறைகள், கைச் சுத்திகரிப்பான்கள் வழங்கப்பட்டும்கூட இத்தனை பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர். நோயெதிர்ப்பு ஆற்றலைக் கூட்டும் மருந்துகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. பல சம்பவங்களில், காவலர்களின் குடும்பத்தினரையும் அல்லது நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் கிருமி தொற்றிவிட்டது,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் சொன்னதாக ‘தி இந்து’ ஊடகத்தின் செய்தி கூறுகிறது.

நூறாயிரத்திற்கும் மேற்பட்டோரைக் கொண்ட தமிழகக் காவல்துறையில் குறைந்தது 25 விழுக்காட்டினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி தெரிவித்தார்.

கிருமித்தொற்று கண்ட காவலர்களுக்கு அரசின் செலவில் இலவச சிகிச்சையும் கருணைத்தொகையாக ரு.200,000 வழங்கப்படும் என்றும் அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனிடையே, சென்னையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 833 காவலர்களில் 350 பேர் தேறி, பணிக்குத் திரும்பிவிட்டதாக மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்து இருக்கிறார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!