சுடச் சுடச் செய்திகள்

இந்தியாவுக்கு வரும் ரஷ்ய தடுப்பூசி ‘ஸ்புட்னிக் 5’

ஹைதராபாத்: ரஷ்­யா­வில் தயா­ரிக்­கப்­பட்­டுள்ள கொரோனா தடுப்­பூசி விரை­வில் இந்­தி­யா­வுக்கு வரு­கிறது.

முதற்­கட்­ட­மாக 100 மில்­லி­யன் ‘ஸ்புட்­னிக் 5’ தடுப்­பூ­சி­கள் இந்­தி­யா­வில் பயன்­ப­டுத்த இருப்­ப­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இவற்றை வைத்து ஹைத­ரா­பாத்­தில் உள்ள ‘டாக்­டர் ரெட்­டிஸ்’ மருந்து நிறு­வ­னம் மூன்­றாம் கட்ட பரி­சோ­தனை நட­வ­டிக்­கையை மேற்­கொள்­கிறது.

‘ஸ்புட்­னிக்’ தடுப்­புசி தற்­போது ரஷ்­யா­வில் பொது­மக்­கள் பயன்­பாட்­டுக்கு வந்­துள்­ளது. இந்­தத் தடுப்­பூ­சியை இந்­தி­யா­வில் பரி­சோ­தனை செய்­வது, அது வெற்­றி­ய­டை­யும் பட்­சத்­தில் தடுப்­பூ­சியை இந்­தி­யா­வி­லேயே தயா­ரிப்­பது ஆகி­யவை குறித்து பேச்­சு­வார்த்தை நடந்து வந்­தது.

ரஷ்ய நேரடி முத­லீட்டு நிதி­யம் இது­தொ­டர்­பாக இந்­திய நிறு­வ­னத்­து­டன் ஒத்­து­ழைக்க ஒப்­புக்­கொண்­ட­தா­க­வும் செய்தி வெளி­யா­னது.

இந்­நி­லை­யில் டாக்­டர் ரெட்­டிஸ் நிறு­வ­னம் 100 மில்­லி­யன் ‘ஸ்புட்­னிக்’ தடுப்­பூ­சி­களை தயா­ரிக்­கும் என்­றும் அவற்றைக் கொண்டு மூன்­றாம் கட்ட பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளும் என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon