சுடச் சுடச் செய்திகள்

அதிர்ஷ்டத்தை அழைத்து வந்த ஓணம் பண்டிகை; ரூ.12 கோடிக்கு அதிபதியான 24 வயது இளைஞர்

24 வயது இளையரை கோடீஸ்வராக்கி இருக்கிறது கேரள அரசின் காருண்யா பம்பர் லாட்டரி.
 
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசின் காருண்யா பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. அதில் முதல் பரிசு ரூ.12 கோடி. அதன் குலுக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

முதல் பரிசுக்கான சீட்டை வாங்கியவர் இடுக்கியைச் சேர்ந்த அனந்து விஜயன் எனும் இளையர் என்பது தெரிய வந்தது.

எர்ணாகுளத்தில் உள்ள பொன்னீத் கோவியில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார் அவர்.

மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு பெற்றோரும், ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனர்.

“ஓணம் பம்பர் லாட்டரி வாங்கியதும், எனக்குதான் முதல் பரிசு விழும் என்று நண்பர்களிடம் விளையாட்டாக கூறினேன். அது அப்படியே பலித்துவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை,” என்றார் திரு விஜயன்.

பணம் கைக்கு வந்த பிறகு அதனை என்ன செய்வது என்பது பற்றி முடிவு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார் அவர்.

இந்த லாட்டரியில் 2வது பரிசு 6 பெண்கள் இணைந்து வாங்கிய சீட்டுக்கு கிடைத்துள்ளது.

திருச்சூருக்கு அருகில் வசிக்கும் துர்கா, ஓமனா, திரேசா, அனிதா, சிந்து, ரதி என 6 பேர் சேர்ந்து ஒரு சீட்டு வாங்கினர். அந்தச் சீட்டுக்கு இரண்டாவது பரிசாக 1 கோடி ரூபாய் விழுந்திருப்பதால் அவர்கள் அறுவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon