இளம்பெண்ணின் உடலை எரித்த போலிஸ்; விசாரணைக் குழு அமைக்கப்பட்டது

இளம்பெண்ணின் உடலை எரித்த போலிஸ்; விசாரணைக் குழு அமைக்கப்பட்டது

1 mins read
da12c79b-c813-44be-b6bc-f650c317116a
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நால்வர் கும்பலால் 19 வயது இளம்பெண் ஒருவர் சீரழிக்கப்பட்டு, பின் மரணமடைந்ததை அடுத்து டெல்லியில் உள்ள உ.பி. அரசு இல்லத்திற்கு முன்னால் இன்று பலர் போராட்டத்தில் இறங்கினர். படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரில் நால்வர் கும்பலால் சீரழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பின் உயிரிழந்த 19 வயதுப் பெண்ணின் உடலை போலிசார் இன்று அதிகாலையில் எரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தங்களை வீட்டிற்குள்ளே வைத்து போலிசார் பூட்டிவிட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச முதல்வரிடம் நேரில் பேசியதை அடுத்து, அந்த வழக்கின் தொடர்பில் மூவர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.