குப்பைமேட்டில் புதைந்த சிறுமி; மீட்கப்படும் வாய்ப்பு மங்கியது

குப்பைமேட்டில் புதைந்த சிறுமி; மீட்கப்படும் வாய்ப்பு மங்கியது

1 mins read
e95c7c14-25ac-4887-95d1-540f24708a74
அப்பகுதியில் குப்பைகளைக் கிளறி ஆராய்ந்து அதில் இருந்து பலவற்றையும் பொறுக்கி அவற்றை விற்று காலம் தள்ளிவரும் குடும்பங்கள் அதிகம். படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் 30 மீட்டர் உயரமான மிகப்பெரிய குப்பை மேடு இருக்கிறது. அன்றாடம் அங்கு 3,500 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

அந்த மாபெரும் குப்பைக் கிடங்கில் குப்பைகளைக் கிளறி ஆராய்ந்து அதில் இருந்து பலவற்றையும் பொறுக்கி அவற்றை விற்று காலம் தள்ளிவரும் குடும்பங்கள் அதிகம்.

அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நேஹா வாசவா என்ற 12 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை திடீரென்று குப்பை மேடு சரிந்ததால் உள்ளே புதைந்து விட்டார்.

அந்தச் சிறுமியுடன் புதைந்த ஆறு வயது சிறுவன் உடனே மீட்கப்பட்டுவிட்டான்.

ஆனால், சிறுமியை உயிருடன் மீட்க நேற்று ஆறாவது நாளாக முயற்சிகள் நடந்தன.

தற்போது படிப்படியாக மீட்புப் பணியினர் நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்