விபத்துக்குள்ளான காரில் 140 கிலோ போதைப்பொருள்; தப்பியோடிய கும்பல்

ஆந்திரபிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு விபத்து நிகழ்ந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவே இருந்த பிரிப்பானில் மோதி விபத்துக்குள்ளானது.

––இது குறித்து போலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால், போலிசார் அவ்விடத்துக்கு வருவதற்கு முன்பாகவே, காரில் இருந்தவர்கள், காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

கார் சேதமடைந்திருந்ததால் அதனை ஓட்டிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

காரில் வந்தவர்கள் யாரையும் காணாததால் சந்தேகம் அடைந்த போலிசார், காரை சோதனை செய்ததனர்.

அப்போது காரின் இருக்கை பகுதிகளில் 140 கிலோ அளவிற்கு கஞ்சா போதைப்பொருள் இருந்ததை போலிசார் கண்டுபிடித்தனர்.

காரையும் அதிலிருந்த கஞ்சாவையும் கைப்பற்றிய போலிசார், அதைக் காரில் கொண்டு வந்தவர்களைத் தேடி வந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!