சுடச் சுடச் செய்திகள்

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

இந்­தி­யா­வின் உள்­வி­வ­கா­ரங்­கள் தொடர்­பில் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பு (ஐசிஓ)கருத்து தெரி­விப்­பதை ஏற்க இய­லாது என இந்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வின் காஷ்­மீர் கொள்கை குறித்து அந்த அமைப்பு தெரி­வித்த கருத்­து­கள் தவ­றா­னவை என மத்­திய வெளி­யு­றவு அமைச்சு அறிக்கை ஒன்­றில் திட்­ட­வட்­ட­மா­கக் குறிப்­பிட்­டுள்­ளது.

இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்­பில் இடம்­பெற்­றுள்ள நாடு­களின் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் பங்­கேற்ற அமர்வு நைஜர் நாட்­டின் மியாமி நக­ரில் கடந்த 27-29 தேதி­களில் நடை­பெற்­றது.

இதை­ய­டுத்து வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில், ‘ஐசிஒ’ அமர்­வு­களில் காஷ்­மீர் விவ­கா­ரம் குறித்­துப் பேசு­வ­தற்கு பாகிஸ்­தான் தொடர்ந்து ஒத்­து­ழைப்பு அளித்து வரு­வ­தாக அந்த அமைப்­புக் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இது இந்­திய அர­சுக்­குக் கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்பை பாகிஸ்­தான் தனது கைப்­பா­வை­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள இந்­திய வெளி­ய­றவு அமைச்சு, காஷ்­மீர் விவ­கா­ரம் குறித்து அந்த அமைப்­பு ­தெ­ரி­வித்­துள்ள கருத்­து­கள் உண்­மைக்­குப் புறம்­பா­னவை என்று தெரி­வித்­துள்­ளது.

இது­போன்ற செயல்­பாட்டை அந்த அமைப்பு எதிர்­கா­லத்­தில் தவிர்க்க வேண்­டும் என அறி­வு­றுத்தி உள்ள இந்­திய அரசு, குறிப்­பிட்ட ஒரு நாடு தன்­னைப் பயன்­ப­டுத்­திக்கொள்ள ‘ஐசிஒ’ அனு­ம­திப்­பது வருந்­தத்­தக்­கது என­வும் கூறி­யுள்­ளது.

“அண்­மைய அமர்­வில் அந்த அமைப்­பால் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களில் இந்­தியா குறித்து தவ­றான, அடிப்­படை ஆதா­ர­மற்ற, தேவை­யற்ற குறிப்­பு­கள் இடம்­பெற்­றுள்­ளன. இதை இந்­தியா கடு­மை­யா­க­வும் திட்­ட­வட்­ட­மா­க­வும் நிரா­க­ரிக்­கிறது.

“காஷ்­மீர் இந்­தி­யா­வின் ஒருங்­கி­ணைந்த மற்­றும் தவிர்க்க முடி­யாத பகுதி. ஜம்மு காஷ்­மீர் விவ­கா­ரம் உட்­பட இந்­தி­யா­வின் உள் விவ­கா­ரங்­களில் தலை­யிட இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்­புக்கு எந்­த­வித இட­மும் இல்லை. இதைத் தொடக்­கம் முதலே இந்­தியா வலி­யு­றுத்தி வரு­கிறது,” என மத்­திய வெளி­யு­றவு அமைச்சு தமது அறிக்­கை­யில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளது.

மத சகிப்­புத்­தன்மை, தீவி­ர­வா­தம் உள்­ளிட்ட விவ­கா­ரங்­களில் அரு­வ­ருப்­பான பதி­வு­க­ளைக் கொண்ட ஒரு நாடு இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்பு அமைப்­பைப் பயன்­ப­டுத்­திக் கொள்­கிறது என்று பாகிஸ்­தானை மறை­மு­க­மாக சாடி உள்­ளது இந்­தியா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon