வேளாண் சட்ட நகல்களை கிழித்து வீசினார் கெஜ்ரிவால்

விவ­சா­யி­கள் நடத்தி வரும் போராட்­டம் வேதனை அளிப்­ப­தா­க­வும் புதிய வேளாண் சட்­டங்­களை ஆத­ரிக்க இய­லாது என்­றும் டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற டெல்லி சட்­டப்­பே­ரவை சிறப்­புக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டு­ பே­சிய அவர், வேளாண் சட்ட நகல்­க­ளைக் கிழித்­தெ­றிந்­தார். அப்­போது விவ­சா­யி­க­ளுக்­குத் தம்­மால் துரோ­கம் செய்ய இய­லாது என்று அவர் குறிப்­பிட்­டார்.

வேளாண் சட்­டங்­க­ளைத் திரும்­பப் பெற­வைக்க விவ­சா­யி­கள் இன்­னும் எத்­தனை தியா­கங்­க­ளைச் செய்­ய­வேண்­டும் என மத்­திய அரசு எதிர்­பார்க்­கிறது? என்று கேள்வி எழுப்­பிய முதல்­வர் கெஜ்­ரி­வால், போராட்­டத்­தில் பங்­கேற்ற விவ­சா­யி­களில் இது­வரை 20 பேர் உயி­ரி­ழந்து விட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

“நான் முத­லில் இந்­தத் தேசத்­தின் குடி­ம­க­னாக இருக்­க­வேண்­டும். அதன்­பி­றகு முதல்­வ­ராக இருக்­கி­றேன். இந்­தச் சட்­டப்­பே­ரவை வேளாண் சட்­டங்­களை நிரா­க­ரிக்­கிறது. விவ­சா­யி­க­ளின் கோரிக்­கையை நிறை­வேற்­று­மாறு மத்­திய அரசை வலி­யு­றுத்­து­கி­றேன்,” என்­றார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.

இந்­நி­லை­யில் வேளாண் சட்­டங்­கள் தொடர்­பாக பரப்­பப்­படும் வதந்­தி­களை விவ­சா­யி­கள் நம்­ப­வேண்­டாம் என பிர­த­மர் மோடி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

இது­தொ­டர்­பாக மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர் விடுத்­துள்ள வேண்­டு­கோ­ளைச் சுட்­டிக்­காட்டி டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், நாட்டு மக்­கள் அனை­வ­ருக்­கும் இத்­த­க­வல் சென்­ற­டைய வேண்­டும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­திர சிங் தோமர் விவ­சாய சங்­கங்­க­ளுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தம் ஒன்­றில் புதிய வேளாண் சட்­டங்­க­ளால் விலை­பொ­ருட்­க­ளுக்­கான குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை நிறுத்­தப்­படும் என்று சில­த­ரப்­பி­னர் வதந்தி பரப்­பு­வ­தா­கச் சாடி­யுள்­ளார்.

விவ­சா­யி­கள் ரயில்வே தண்­ட­வா­ளங்­களில் அமர்ந்து நடத்­தும் போராட்­டம் கார­ண­மாக எல்­லை­யில் நாட்­டைக் காக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்ள வீரர்­க­ளுக்கு உண­வுப் பொருட்­களை அனுப்ப முடி­ய­வில்லை என அவர் கவலை தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!