தேசத்துரோக வழக்குப் பதிவு: ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம்

விவ­சா­யி­க­ளின் இரண்டு மாதப் போராட்­டம் தொடர்­பாக செய்­தி­க­ளைச் சேக­ரித்து வெளி­யி­டும் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மீது மத்­திய, மாநில அர­சு­கள் தொடர்ந்து பொய் வழக்­கு­கள் தொடுப்­ப­தாக பல்­வேறு ஊட­க­வி­ய­லா­ளர்­கள் சங்­கம் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

மூத்த ஊட­க­வி­ய­லா­ளர்­கள் சிலர் மீது தேசத்­து­ரோக வழக்கு பதி­வாகி இருப்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ள அச்­சங்­கங்­கள், இத்­த­கைய அச்­சு­றுத்­தும் போக்கை ஏற்க இய­லாது என குறிப்­பிட்­டுள்­ளன.

உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட பாஜக ஆளும் மாநி­லங்­க­ளில்­தான் இத்­த­கைய வழக்­கு­கள் அதி­கம் பதி­வாகி வரு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

‘இந்­தியா டுடே’வைச் சேர்ந்த ராஜ்­தீப் சர்­தே­சாய், ‘நேஷ­னல் ஹெரால்ட்’ பத்­தி­ரி­கை­யின் மூத்த ஆலோ­ச­கர் மிரு­னல் பாண்டே, ‘க்வாமி ஆவாஸ்’ பத்­தி­ரி­கையின் ஆசி­ரி­யர் ஜாஃபர் ஆகா, ‘தி கேரவன்’ பத்திரிகையின் நிறுவனர் பரேஷ் நாத் உள்­ளிட்ட பலர் மீது கடந்த வியா­ழக்­கி­ழமை தேசத்­து­ரோக வழக்கு பதி­வாகி உள்­ளது.

தவ­றான செய்­தி­களை வெளி­யி­டு­வது, அச்­செய்­தி­களை தங்­க­ளின் சமூக வலைத்­த­ளப் பக்­கங்­கள் மூலம் பரப்­பு­வது ஆகிய குற்­றச்­சாட்­டு­கள் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.

அண்­மைய வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளின்­போது போராட்­டத்­தில் பங்­கேற்ற ஒரு­வர் போலி­சா­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­னது. ஆனால் இத்­த­க­வல் உண்மை அல்ல என்று மறுத்­துள்ள போலி­சார் உயி­ரி­ழந்த ஆட­வர் தாம் ஓட்டி வந்த டிராக்­டர் வாக­னம் கவிழ்ந்­த­தில், அதன் கீழே சிக்கி பலி­யா­ன­தாக கூறி­யுள்­ள­னர்.

ஊட­கங்­களில் பொய்­யான செய்தி வெளி­யா­ன­தா­க­வும் குற்­றம்­சாட்டி உள்­ள­னர். இதை­ய­டுத்து மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­கள் இந்­தக் குற்­றச்­சாட்­டை­யும் எதிர்­கொண்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் தேசத்­து­ரோக வழக்­கின் மூலம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­தும் போக்கை அர­சு­கள் கடைப்­பி­டிப்­ப­தாக ஊட­கச் சங்­கங்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன. தேசத்­து­ரோக வழக்கு தொடுப்­ப­தற்கு என்ன அவ­சி­யம் எழுந்­துள்­ளது என்­றும் அவை கேள்வி எழுப்­பி­யுள்­ளன.

பத்­தி­ரிகை சுதந்­தி­ரம் உள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இரண்டு இடங்­கள் கீழி­றங்கி இந்­தியா 142வது இடத்­தில் உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!