பிரசாரத்துக்கு திடீர் தடை: மம்தா போராட்டம்

கோல்­கத்தா: தமது தேர்­தல் பிர­சா­ரத்­துக்குக் தடை விதிக்­கப்­பட்­ட­தைக் கண்­டித்து மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி நேற்று போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.

கோல்­கத்­தா­வில் உள்ள காந்தி மூர்த்தி பகு­தி­யில் அவர் இப்போராட்­டத்தை மேற்­கொண்­டார்.

முன்­ன­தாக தேர்­தல் விதி­மு­றை­களை மீறி மம்தா பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­ட­தாக எதிர்க்­கட்­சி­கள் புகார் எழுப்­பின. இது­கு­றித்து தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து திங்­கட்­கி­ழமை இரவு 8 முதல் செவ்­வாய்க்­கி­ழமை (நேற்று) இரவு 8 மணி வரை பிர­சா­ரம் மேற்­கொள்ள அவ­ருக்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

போராட்­டத்தை அடுத்து காந்தி மூர்த்தி பகு­தி­யில் தற்­கா­லிக கூரை அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதன் கீழே சக்­கர நாற்­கா­லி­யில் அமர்ந்­த­படி முதல்­வர் மம்தா போராட்­டத்­தில் ஈடு­பட்­டார். பாது­காப்பு அதி­கா­ரி­களும் மற்­ற­வர்­களும் சற்று தூரத்­தில் அமர்ந்­தி­ருந்­த­னர்.

இந்­நி­லை­யில் தேர்­தல் ஆணை­யத்­தில் அளித்­துள்ள மனு ஒன்­றில், சர்ச்­சைக்­கு­ரிய வகை­யில் அவ­தூ­றான கருத்­துக்­க­ளைத் தெரி­விக்­கும் பாஜக தலை­வர்­கள் மீதும் தேர்­தல் ஆணை­யம் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்சி வலி­யு­றுத்தி உள்­ளது.

போராட்­டத்­தையொட்டி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முதல்­வர் மம்தா, இந்­திய தேர்­தல் ஆணை­யம் ஜன­நா­யக விரோ­தப் போக்கை கடைப்­பி­டிப்­ப­தாக குற்­றம்­சாட்­டி­னார். நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு விரோ­த­மான தேர்­தல் ஆணை­யத்­தின் முடிவை தாம் கண்­டிப்­ப­தாக அவர் கூறி­னார்.

மேற்கு வங்­கத்­தில் எதிர்­வ­ரும் 17ஆம் தேதி ஐந்­தாம் கட்­டத்­தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­மடைந்­துள்­ளன.

இந்­நி­லை­யில், தேர்­தல் நடை­பெற உள்ள முர்­ஷி­தா­பாத் மாவட்­டத்­தின் ஷாம்­ஷெர்­கஞ்ச் பகு­தி­யில் இருந்து 14 வெடி­குண்­டு­கள் கைப்­பற்­றப்­பட்டு உள்­ளன.

இதற்­கி­டையே, பிர­சா­ரத்­தின்­போது அவ­தூ­றா­கப் பேசி­ய­தால் பாஜக மூத்த தலை­வர் ராகுல் சின்­ஹா­வுக்­கும் 48 மணி நேரம் பிர­சா­ரம் செய்ய தேர்­தல் ஆணை­யம் தடை விதித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!