டவ்தே புயல்: கப்பல் மூழ்கியதில் 37 பேர் பலி

காணாமல் போன மேலும் பலரைத் தேடும் பணி தொடர்கிறது

மும்பை: 'டவ்தே' புயல் காரணமாக மும்பை அருகே எண்ணெய்க் கிணற்றில் வேலைபார்க்கும் ஊழியர்களின் கப்பல் 261 பேருடன் நடுக்கடலில் மூழ்கியது. அவர்களில் 188 பேர் காப்பாற்றப்பட்டனர்.

கடல்­ப­டைக் கப்­பல்­கள், விமா­னங்­கள், ஹெலி­காப்­டர்­கள் என முழு வீச்­சில் தேடி மீட்­கும் பணி­யில் இறங்­கி­யுள்­ளது இந்­தி­யக் கடற்­படை.

இந்நிலையில் 37 பேரின் உடல்களை இந்தியக் கடற்படை வீரர்கள் மீட்டுள்ளனர். மேலும் எஞ்சியவர்களைத் தேடும் பணியை இந்திய கடற்படை தொடர்கிறது.

மூழ்கிய அக்­கப்­ப­லின் தலை­மைப் பொறி­யா­ள­ரான ரஹ்­மான் ஷேக், "இது­போன்ற ஆபத்­தில் உயி­ரைக் காத்­துக்­கொள்­வ­தற்­காக கப்­ப­லில் பொருத்­தப்­பட்­டி­ருந்த மிதவை வளை­யங்­கள் பெரும்­பா­லா­ன­வற்­றில் காற்­றுப் போயி­ருந்­தது. இல்­லை­யெ­னில் கப்­ப­லில் இருந்த அனை­வ­ரும் உயிர்­பி­ழைத்­தி­ருப்­பர்," என்று கூறி­னார்.

முழங்­கா­லில் பலத்த காயங்­க­ளு­டன் டார்­டியோ நக­ரில் உள்ள அப்­போலோ மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள ஷேக், "புயல் குறித்த எச்­ச­ரிக்கை ஒரு வாரத்­திற்கு முன்பே எங்­க­ளுக்­குக் கிடைத்­தது. இதை­ய­டுத்து அங்­கி­ருந்த மற்ற கப்­பல்­கள் அனைத்­தும் அந்­தக் கடல் பகு­தியை விட்டு துறைமுகத்திற்குத் திரும்­பி­விட்­டன.

"நான் எனது கப்­பல் கேப்­டன் பல்­விந்­தர் சிங்­கி­டம், இது­கு­றித்­துக் கூறி, நாமும் துறை­மு­கத்­திற்­குத் திரும்­பு­வதே நல்­லது என்று எடுத்­து­ரைத்­தேன். ஆனால், அதற்கு அவரோ, புயல் காற்று 40 கி.மீ. வேகத்­திற்கு மேல் அடிக்­காது என்­றும் புயல் இன்­னும் ஓரிரு மணி நேரங்­களில் மும்­பை­யைக் கடந்து விடும் என்­றும் கூறி­விட்­டார். ஆனால், புய­லின் சீற்­றமோ, நாங்­கள் கொஞ்­ச­மும் நினைத்­துப் பார்க்­காத அளவு 100 கி.மீ. வேகத்­தில் வீசி­யது. அந்­தக் காற்­றின் வேகத்­தில் கப்­ப­லின் ஐந்து நங்­கூ­ரங்­கள் உடைந்து கப்­பல் கட­லுக்­குள் இழுத்து சாய்க்­கப்­பட்­டது. புய­லின் சீற்­றத்­தைச் சமா­ளிக்க முடி­யா­மல் திண­றி­னோம்," என்று கூறி­னார்.

இந்­நி­லை­யில் உயிர்­பி­ழைத்த 19 வயது மனோஜ் கூறு­கை­யில், "கப்­பல் மூழ்­கத் தொடங்­கி­ய­வு­டன் நாங்­கள் கவலை அடைந்­தோம். நானும், மற்ற தொழி­லா­ளர்­களும் உயிர்­காக்­கும் ஜாக்­கெட் அணிந்து கொண்டு தண்­ணீ­ரில் குதித்­தோம். அது மிக­வும் ஒரு மோச­மான சூழ்­நிலை. நான் உயிர்­பி­ழைப்­பேன் என்று நினைத்­துப் பார்க்­கவே இல்லை. ஆனால் உயிர் பிழைக்க வேண்­டும் என்ற உறு­தி­யு­டன் 7 முதல் 8 மணி நேரம் நீச்­சல் அடித்­துக் கொண்டே இருந்­தேன். அப்­போது தான் கடற்­ப­டை­யால் மீட்­கப்­பட்­டேன். ஆனால் கட­லில் எனது ஆவ­ணங்­கள் மற்­றும் செல்­போன் போய்­விட்­டது," என்று கண்­ணீர்­மல்­கக் கூறி­னார்.

மனோஜ் கிதே கடந்த மாதம் தான் எண்­ணெய்க் கிணற்­றில் உத­வி­யா­ள­ராக வேலைக்­குச் சேர்ந்­தார். தற்­போது ஏற்­பட்ட மோச­மான அனு­ப­வம் கார­ண­மாக அவர் மீண்­டும் எண்­ணெய்க் கிணறு வேலைக்­குச் செல்ல விரும்­ப­வில்லை என கூறி­யுள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வி­லும் டவ்-தே புயல் கடு­மை­யான சேதத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மும்­பை­யில் 70% மரங்­கள் வேரோடு சாய்ந்­துள்­ளன.

குஜ­ராத்­தில் டவ்-தே புய­லின் சீற்­றத்­துக்கு இது­வரை பலி­யா­னோர் எண்­ணிக்கை 49 என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!