மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்

போபால்: கொவிட்-19 தொற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்டு உயி ­ரிழந்த தனது காதல் மனை­விக்கு கண­வர் கோயில் கட்டி கும்­பிட்டு வரு­கி­றார்.

ஷாஜ­பூ­ரில் இருந்து 3 கி.மீ. தொலை­வில் உள்ள சம்ப்­கேடா கிரா­மத்­தைச் சேர்ந்த நாரா­யண் சிங் ரத்­தோ­ரின் மனைவி கீதா­பாய். இரு­வ­ரும் காத­லித்து திரு­ம­ணம் செய்துகொண்­ட­னர்.

கொரோனா 2வது அலை­யில் நாராயண் சிங் ராத்தோரின் மனைவி கீதா­பாய் இறந்துவிட்­டார். இத­னால் மனை­வி­யின் நினை­வில் அன்­றா­டம் மூழ்கி இருந்த நாரா­யண் சிங் ரத்­தோர், மனை­விக்குக் கோயில் கட்ட முடிவு செய்­தார்.

அதன்­படி காதல் மனை­விக்கு அவ­ரது சொந்த இடத்­தில் கோவில் ஒன்றைக் கட்­டி­யுள்­ளார். அந்த கோயி­லில் தனது மனை­வி­யின் சிலை­யை­யும் அவர் நிறு­வி­னார்.

தினந்­தோ­றும் அவர் வழி­பாடு செய்து வரு­கி­றார். அவ­ரது குடும்­பத்­தி­ன­ரும் தின­மும் சிலையை வணங்கி வரு­கின்­ற­னர்.

இது குறித்து பேசிய ரத்­தோ­ரின் மூத்த மகன் லக்கி, "இந்­தக் கோவில் என் தாய் எங்­களை சுற்றி இருக்­கி­றார் என்ற உணர்வை ஏற்­ப­டுத்­து­கிறது." என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!