இந்தியாவில் 7-லெவன் கடைகள்

இந்தியாவில் 7-லெவன் கடைகள்

1 mins read
5a4c24c1-a0e3-4670-b410-c9dde5b6187f
அம்பானியின் 'ரிலையன் ரீடெயில்' நிறுவனம் இந்தியாவில் 7-லெவன் கடைகளைத் திறக்கவிருக்கிறது. கோப்புப்படம் -

மும்பை: ஆசியாவின் பெரும் பணக்காரரான இந்தியாவின் முகேஷ் அம்பானி, வாரம் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் 7-லெவன் கடைகளை இந்தியாவிற்குக் கொண்டு வருகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் ஆகப்பெரிய சங்கிலித் தொடர் நிறுவனங்களில் ஒன்றான 7-லெவன் நிறுவனத்துடன் 'பியூச்சர் ரீடெயில்' சில்லறை வணிகக் குழுமம் உடன்பாடு செய்துகொண்டு இருந்தது.

ஆனால், அந்த உடன்பாடு முடித்துக்கொள்ளப்பட்டுவிட்டது. இதனையடுத்து, அம்பானியின் 'ரிலையன்ஸ் ரீடெயில்' நிறுவனம், 7-லெவன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

முதலாவது 7-லெவன் கடை வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை மும்பை புறநகர்ப் பகுதியில் திறக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, மும்பையில் பல பகுதிகளிலும் விரைவில் அந்தக் கடைகள் திறக்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்