ஒரு பில்லியன் தடுப்பூசிகள் போட்டு இந்தியா சாதனை

'இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின் வெற்றியைக் கண்டு வருகிறோம்'

புதுடெல்லி: ஒரு பில்­லி­யன் கொரோனா தடுப்­பூ­சி­கள் போட்டு இந்­தியா வர­லாறு படைத்­தி­ருப்­ப­தா­கப் பிர­த­மர் மோடி பெரு­மி­தம் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், இந்­தச் சாத­னையை எட்ட உத­விய ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நன்றி தெரி­விப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நாம் இந்­திய அறி­வி­ய­லின் மாண்பை, கூட்­டு­மு­யற்­சி­யின், செய­லாக்­கத்­தின் வெற்­றி­யைக் கண்டு கொண்­டி­ருக்­கி­றோம். வாழ்த்­து­கள் இந்­தியா.

"ஒரு பில்­லி­ய­ன் தடுப்­பூ­சி­கள் செலுத்­தி­விட்­டோம். மருத்­து­வர்­கள், தாதி­யர்­க­ளுக்கு நன்றி," என்று பிர­த­மர் மோடி தமது பதி­வில் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் 18 வய­துக்கு மேற்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 940 மில்­லி­யன் ஆகும். அவர்­கள் அனை­வ­ருக்­கும் இரண்டு தடுப்­பூ­சி­கள் போடு­வது என மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

இதை­ய­டுத்து தடுப்­பூ­சிக் கொள்கை வகுக்­கப்­பட்டு, நாடு முழு­வ­தும் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை முடுக்­கி­வி­டப்­பட்­டது.

மாநில அர­சு­கள் தொடர்ந்து சிறப்பு முகாம்­களை நடத்தி தடுப்­பூசி போட்­டுக்கொள்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்க உத­வு­கின்­றன. அதன் பல­னாக ஒரு பில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் தொலை­நோக்­குப் பார்­வை­யால் இந்­தச் சாதனை சாத்­தி­ய­மா­னது என மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்ட்­வியா

தெரி­வித்­துள்­ளார்.

தமது டுவிட்­டர் பக்­கத்­தில், "வாழ்த்­து­கள் இந்­தியா!" என்று குறிப்­பிட்­டுள்ள அவர் நேற்று நண்­ப­க­லில் ஒரு பில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடும் மைல்­கல்லை எட்­டி­ய­தைக் குறிப்­பி­டும் வகை­யில் காணொளி ஒன்­றை­யும் வெளி­யிட்­டார்.

நாடு முழு­வ­தும் இது­வரை, 75 விழுக்­காட்­டி­ன­ருக்கு ஒரு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஒன்­பது மாதங்­களில் இந்­தியா இதைச் சாதித்­துள்­ளது என்­றும் மத்­திய நிதி ஆயோக் உறுப்­பி­னர் வி.கே.பால் கூறி­யுள்­ளார்.

25 விழுக்­காட்­டி­னர் தகு­தி­யி­ருந்­தும் இன்­னும் தடுப்­பூசி போட்­டுக் கொள்ள முன்­வ­ர­வில்லை என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"முதல் தவணை தடுப்­பூ­சி­கூட செலுத்­திக்கொள்­ளா­த­வர்­களை குறி­வைத்­துச் செயல்­பட வேண்­டும். இது­வரை 30% பேர் இரண்டு தவணை தடுப்­பூ­சி­யும் போட்­டுக் கொண்­டுள்­ள­னர். 100 மில்­லி­யன் பேர், இரண்­டா­வது தடுப்பூ­சிக்­கான காலக்­கெடு முடிந்­தும் இன்­னும் அதனை போட்­டுக்கொள்­ள­வில்லை," என்­றும் விகே.பால் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் நாட்­டில் 18,454 பேருக்கு புதி­தாக தொற்று பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. 160 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, உலக சுகா­தார அமைப்­பின் அங்­கீ­கா­ரம் பெற்ற தடுப்­பூ­சியை முழு­வ­து­மாக போட்­டுக்­கொண்­டுள்ள அனைத்­து­ல­கப் பய­ணி­கள் இந்­தி­யா­வுக்கு வந்­தால் தனி­மைப்­ப­டுத்­து­த­லுக்கு உட்­ப­டத் தேவை­யில்லை என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

வரும் 25ஆம் தேதி முதல் இந்த அறி­விப்பு அம­லுக்கு வரும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் ஒரு பில்­லி­யன் தடுப்­பூசி போடப்­பட்­டது என்­பது அனைத்து இந்­தி­யர்­களும் பெரு­மைப்­பட வேண்­டிய விஷ­யம் என்று காங்­கி­ரஸ் எம்பி சசி தரூர் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­காக மத்­திய அர­சைப் பாராட்ட வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத­னால் காங்­கி­ரஸ் தலைமை அதி­ருப்தி அடைந்­துள்­ளது.

"தவ­றான மேலாண்மை, நிர்­வா­கத்­தால் லட்­சக்­க­ணக்­கான மக்­கள் பாதிக்­கப்­பட்டு, குண­ம­டைந்த பின்­பும் இன்­னும் பக்­க­வி­ளை­வு­க­ளால் இருப்­ப­வர்­களை அவ­ம­திப்­ப­தாக சசி தரூர் கருத்து இருக்­கிறது," என அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!