அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

1 mins read
a0ba3b10-e9f1-4eb1-80fa-57437b434d7e
-

கௌகாத்தி: அசாம் மாநி­லம் சில்­சா­ர் நகரிலிருந்து நேற்றுக் காலை புறப்­பட்ட ஏர் இந்­தியா விமா­னத்­தின் 'லேண்­டிங் கியர்' ஒன்று பழு­த­டைந்­தது.

இதனைக் கண்­ட­றிந்­த­தால் விமா­னம் புறப்­பட்ட உட­னேயே தரை­யி­றக்கப்­பட்­டது. இத­னால் பெரும் விபத்து தடுக்­கப்­பட்­டது. பயணிகளில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அசாமின் குல்குராம் விமான நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. கோல்கத்தா செல்லக்கூடிய அந்த விமானத்தின் பின்சக்கரத்தில் கோளாறு கண்டறி யப்பட்டது.

ஏர்­பஸ் ஏ319 என்ற இந்த விமா­னம் ஒரு குறு­கிய முதல் நடுத்­தர வகை­யைச் சேர்ந்­தது. 124 முதல் 156 பய­ணி­கள் வரை அமரும் வசதி கொண்­டது. அக்­டோ­பர் 22ஆம் தேதி, பயணி ஒரு­வ­ருக்கு மூச்­சுத்திண­றலும் மயக்கமும் ஏற்­பட்­ட­தால் டெல்லி நோக்­கிச் சென்ற விஸ்­தாரா விமா­னம் மத்­தி­யப் பிர­தே­சத்­தின் இந்­தூ­ர் நகரில் தரை­யி­றக்­கப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.