ஆப்கான் நிலைமை: இந்தியா கவலை

ஜெய்சங்கர்: மக்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்க

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தான் மக்கள் நல­மு­டன் இருக்க வேண்­டும் என்­ப­தில் இந்­திய அரசு உறு­தி­யான நிலைப்­பாட்­டைக் கொண்­டுள்­ள­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

ஆப்­கா­னிஸ்­தா­னின் அண்டை நாடா­க­வும் நீண்ட கால நட்பின் அடிப்­ப­டை­யி­லும் அந்­நாட்­டின் அண்­மைய நிகழ்­வு­கள் குறித்­தும் அந்­நாட்டு மக்­க­ளின் துய­ரத்தை எண்­ணி­யும் இந்­தியா வருத்­தம் அடைந்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

'ஆா்ஐசி' எனப்­படும் ரஷ்யா, இந்­தியா, சீனா ஆகிய மூன்று நாடு­க­ளைக் கொண்ட கூட்­ட­மைப்­பின் வெளி­யு­றவு அமைச்­சா்­கள் கூட்­டம் நேற்று முன்­தி­னம் நடை­பெற்­றது.

இதில் காணொளி வசதி மூலம் கலந்துகொண்டு பேசிய ஜெய்­சங்­கர், ஆப்­கா­னிஸ்­தா­னில் அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் உள்­ள­டக்­கிய, அனை­வ­ருக்­கும் பிரதி­நி­தித்­து­வம் உள்ள அரசு அமைய இந்­தியா ஆத­ர­வ­ளிப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

"ஆப்­கா­னிஸ்­தா­னில் நில­வும் வறட்­சியை எதிா்கொள்ள 50 ஆயி­ரம் மெட்­ரிக் டன் கோது­மையை இந்­திய அரசு அனுப்பி வைத்­துள்­ளது.

"அங்­குள்ள மக்­க­ளுக்கு எந்­த­வித இடை­யூ­றும் அர­சி­ய­லும் இல்­லா­மல் உத­வி­கள் கிடைப்­பதை உறுதி செய்ய 'ஆா்ஐசி' நாடு­கள் ஒன்­றி­ணைந்து பணி­பு­ரிய வேண்­டும்," என்­றார் ஜெய்­சங்­கர்.

பயங்­க­ர­வா­தம், போதைப்­பொ­ருள் கடத்­தல் அச்­சு­றுத்­தல் அதி­க­ரித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அவற்­றுக்கு எதி­ரான தங்­க­ளின் நட­வ­டிக்­கை­களை ஒருங்­கி­ணைந்து மேற்­கொள்ள வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

ஐநா பாது­காப்பு மன்­றத்­தின் தற்­கா­லிக உறுப்­பி­ன­ராக சேர்ந்­தது முதல் அனைத்­து­லக, வட்­டார விவ­கா­ரங்­களில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னர் ஏற்­கக்­கூ­டிய தீர்­வு­களை எட்­டு­வ­தில் இந்­தியா தனது பங்­க­ளிப்பை நிறை­வாக அளித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மேலும், ஐநா அமைப்­பில் சில சீர்­தி­ருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று வலி­யு­றுத்­திய அமைச்­சர் ஜெய்­சங்­கர், கருத்­தொற்­றுமை என்ற போர்­வை­யில், அதற்­கான நட­வ­டிக்­கை­கள் தடுக்­கப்­ப­டு­வ­தா­கச் சாடி­னார்.

இதன் கார­ண­மாக அனைத்­து­ல­கச் சமூ­கத்­தின் ஜன­நா­யக உரி­மை­கள் மறுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!