கிழக்கு லடாக்கில் ஏவுகணை, ராக்கெட் படைப் பிரிவுகளை குவிக்கும் சீனா: மீண்டும் பதற்றம்

ஸ்ரீந­கர்: கிழக்கு லடாக் எல்­லைப் பகு­தி­யில் சீனா புதிய சாலை­கள், நெடுஞ்­சா­லை­களை அமைத்து வரு­வ­தாகத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

மேலும், அண்­மைய சில தினங்­க­ளாக சீன ராணு­வம் ஏவு­கணை, ராக்­கெட் படைப்­பி­ரி­வு­களை அங்கு குவித்து வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இதை­ய­டுத்து, எல்­லை­யில் மீண்­டும் பதற்­ற­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே தனது எல்­லைப் பகு­தி­களில் கஷ்­கர், கார்­குன்சா, ஹோட்­டன் ஆகிய மூன்று இடங்­களில் விமா­னத் தளங்­களை அமைத்­துள்ள சீனா, தற்­போது மேலும் சில புதிய விமா­னத் தளங்­களை அமைக்க முடிவு செய்­துள்­ளது.

இதை­ய­டுத்து, நெடுஞ்­சா­லை­களும் அமைத்து வரு­வ­தால் எல்­லைப் பகு­தி­யில் அதன் பலம் அதி­க­ரித்­துள்­ள­தாக 'இந்­தியா டுடே' ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இந்­நி­லை­யில், ஏவு­கணை, ராக்­கெட் படைப்­பி­ரி­வு­க­ளைச் சேர்ந்த ஏரா­ள­மான வீரர்­கள் திபெத் உட­னான எல்­லைப் பகு­தி­யில் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும், ரக­சிய தங்­கு­மி­டங்­களும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­படும் ஆளில்லா சிறிய ரக வானூர்­தி­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. திபெத்­தைச் சேர்ந்த பலரை தனது ராணு­வத்­தில் சேர்த்து வரு­கிறது சீனா. அவ்­வாறு தேர்­வா­கும் திபெத்­தி­யர்­கள் எல்­லைப் பகு­தி­களில் நிறுத்தி வைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

இந்த நட­வ­டிக்கை தற்­போது வேகம் எடுத்­துள்­ள­தா­க­வும் சீன படை­யி­ன­ரால் தாக்­குப்­பி­டிக்க முடி­யாத அந்த நிலப்­ப­ரப்­பில் மண்­ணின் மைந்­தர்­க­ளையே கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் அந்த ஊட­கச் செய்தி மேலும் குறிப்­பி­டு­கிறது.

கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், நடப்பு குளிர்­கா­லத்தை எதிர்­கொள்­வ­தில் சீன ராணு­வம் தயார்­நி­லை­யில் இருப்­ப­தா­க­வும் தங்­கு­மி­டம், சாலை இணைப்பு, சூழ்­நி­லைக்­கேற்ப செயல்­ப­டு­வது ஆகி­ய­வற்­றில் சீனப்­ப­டை­கள் கூடு­தல் தேர்ச்சி பெற்­றுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இரு­த­ரப்­புக்கு இடை­யே­யான பேச்­சு­வார்த்­தை­களில் சீன ராணு­வம் எல்­லைப் பகு­தி­களில் படை­களைக் குவித்து வரு­வது குறித்­தும், கட்­டு­மா­னப் பணி­களை மேற்­கொள்­வது பற்­றி­யும் இந்­தியா தொடர்ந்து புகார் எழுப்பி வரு­கிறது. இந்நிலையில், சீனா மீண்டும் எல்லைப் பகுதியில் துருப்புகளைக் குவித்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!