கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் நேற்று முதல் இரவு நேர ஊர­டங்கு அம­லுக்கு வந்­துள்­ளது.

பல்­வேறு தரப்­பி­ன­ரின் கடும் எதிர்ப்­பை­யும் மீறி ஊர­டங்கை அமல்­ப­டுத்­து­வ­தாக அம்­மா­நில முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை அறி­வித்­துள்­ளார்.

நாடு முழு­வ­தும் கொரோ­னா­வின் ஓமிக்­ரான் வகை பாதிப்பு வேக­மா­கப் பரவி வரு­கிறது. இது­வரை 21 மாநி­லங்­களில் இந்த பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

கர்­நா­ட­கா­வில் 38 பேருக்கு ஓமிக்­ரான் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து, அம்­மா­நில அரசு தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது.

அத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, நேற்று முதல் இரவு நேர ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இரவு 10 மணி முதல் அதி­காலை 5 மணி வரை ஊர­டங்கு உத்­த­ரவு அம­லில் இருக்­கும்.

மாநில அர­சின் இந்த முடி­வுக்கு கர்­நா­டக திரை­யு­ல­கத்­தி­னர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். இரவு ஊர­டங்கு கார­ண­மாக திரைப்­படப் படப்­பி­டிப்­பு­கள் பாதிக்­கப்­படும் என அவர்­கள் கவலை தெரி­வித்­துள்ளனர்.

இதே போல் உண­வக, திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள், கேளிக்கை விடு­தி­கள் தரப்­பில் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்ட போதி­லும், கர்­நா­டக அரசு எதை­யும் பொருட்­ப­டுத்­த­வில்லை.

தற்­போ­தைய சூழ­லில் தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­குத்­தான் அரசு முன்­னு­ரிமை அளிக்­கும் என்று ஆளும் தரப்பு திட்­ட­வட்­ட­மாகக் கூறி­யுள்­ளது.

குஜ­ராத், அசாம், ஹரி­யானா, உத்­த­ரப் பிர­தே­சம், மத்­தி­யப் பிர­தே­சம், டெல்லி உள்­ளிட்ட மாநி­லங்­கள் ஏற்­கெ­னவே இரவு நேர ஊர­டங்கை அமல்­ப­டுத்தி உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!