இந்தியாவிடம் கோதுமை வாங்கும் எகிப்து

புது­டெல்லி: இந்­தி­யா­வி­ட­லி­ருந்து கோதுமை இறக்­கு­மதி செய்ய எகிப்­திய நாடு முடிவு செய்­துள்­ள­தாக மத்­திய வர்த்­த­கத் துறை அமைச்­சர் பியுஷ் கோயல் தெரி­வித்­துள்­ளார். கோதுமை ஏற்­று­ம­தி­யில் ரஷ்­யா­வும் உக்­ரே­னும் முன்­னணியில் இருந்து வரு­கின்­றன.

தற்­போது உக்­ரே­னில் போர் நடந்து வரு­வ­தா­லும் ரஷ்யா மீது பொரு­ளியல் தடை­கள் விதிக்­கப்­பட்­ட­தா­லும் அவை கோதுமை உள்­ளிட்ட பொருள்­களை ஏற்­று­மதி செய்ய முடி­யாத நிலை­யில் உள்­ளன. இந்­தச் சூழ்நிலையை தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி தனது சந்­தையை விரி­வு­ப­டுத்­திக் கொள்ள இந்­தியா முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.

இதன் ஒரு பகு­தி­யாக எகிப்தை இந்­தியா அணு­கிய நிலை­யில் கோது­மையை வாங்க அந்­நாடு சம்­ம­தம் தெரி­வித்­துள்­ள­தாக அமைச்­சர் பியுஷ் கோயல் தெரி­வித்­துள்­ளார்.

எகிப்து அதி­கா­ரி­கள் இந்­தி­யா­வுக்கு வந்து கோதுமைக் கிடங்­கு­களைப் பார்­வை­யிட்­டுச்­சென்ற நிலை­யில் இந்த ஒப்­பு­தல் கிடைத்­துள்­ளது. இந்­தி­யா­வி­டம் இருந்து 10 லட்­சம் டன் கோதுமையை வாங்க எகிப்து முடிவு செய்­துள்­ள­தாக அமைச்­சர் பியுஷ் கோயல் மேலும் தெரி­வித்­தார்.

இந்­திய விவ­சா­யி­க­ளின் உழைப்­பால் தானி­யக் களஞ்­சி­யங்­கள் நிரம்­பி­யுள்­ள­தா­க­வும் அதைக்­கொண்டு உல­கின் உண­வுத் தேவையை இந்­தியா பூர்த்தி செய்­யும் என்­றும் தனது டுவிட்­டர் பதி­வில் பியுஷ் கோயல் குறிப்பிட்டு உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!